Tuesday 14th of July 2026

English Tamil
Advertiesment


அரசியல் சூழல் என்றால் என்ன?


2021-10-14 14943

 


அரசியல் என்பது தீர்மானமிக்க சமூக செயற்பாடாகும்

 


(தேசப்பிரிய நாணயக்கார)

 


அரசியல் சூழல் (Political ecology) என்பது சூழல் நெருக்கடிகள் மற்றும் மாற்றங்களுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக விடயங்கள் குறித்து ஆய்வு செய்தலாகும். மனிதவியல், வனவியல், அபிவிருத்தி ஆய்வு, சூழல் சமூகவிஞ்ஞானம், சுற்றாடல் வரலாறு மற்றும் பூகோள விஞ்ஞானம் ஆகிய துறைகள் அரசியல் சூழலை ஆய்வுசெய்தலில் உள்ளடங்குகின்றன.

அரசியல் சூழல் விஞ்ஞானம் என்பது அமெரிக்க பேராசிரியர்களில் ஒருவரான தோமஸ் ஜே பெஸட் (THOMAS J. BASSETT)  என்பவரால் 1988ஆம் ஆண்டில் பூகோள அறிவிப்பாக இது பயன்படுத்தப்பட்டது. பூகோள விஞ்ஞானியான பேராசிரியர் மைக்கல் ஜே வோட்ஸ்  (Michael J. Watts) என்பவரால் தெரிவித்ததாவது, இயற்கையான சுற்றாடல் வளங்களில் அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை ஏற்படுத்துவது அவற்றின் பெறுமானத்தைக் கொண்டு சுற்றாடல் பாதுகாப்பு செயன்முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். நவீன அரசியல் பொருளாதாரத்தின் மையமாக அரசியல் சுற்றுச்சூழல் அறிவு உள்ளது.

மனிதனின் எதிர்காலம் இயற்கையை கட்டுப்படுத்தும் மனிதனின் உரிமை தன்னை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை உணரும் முன் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொறுத்தது. அதற்கமைய அரசியல் நிச்சயமாக ஒரு தீர்க்கமான சமூக செயல்முறையாகும்.

Advertiesment