Tuesday 14th of July 2026

English Tamil
Advertiesment


பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 20 பேர் பலி!


2021-10-07 14967

 

பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.

இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

Advertiesment