Tuesday 23rd of June 2026

English Tamil
Advertiesment


படையினரை எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுத்த பிரிட்டன் தீர்மானம்


2021-10-02 14990

 

பிரித்தானியாவில் நெருக்கடியை சந்தித்துள்ள எரிபொருள் விநியோக பணிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் படையினரை ஈடுபடுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்காக சுமார் 300 பேர்வரை தற்காலிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மேலும் 300 கனரக வாகன சாரதிகள் வருகின்ற மார்ச் மாதத்திற்கு முன்னதாக வெளிநாடுகளிலிருந்து வேவைக்கு அழைத்து அமர்த்தவும் நடவடிக்கைஎடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா முழுவதிலும் தற்போது நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்கின்ற எரிபொருள் விநியோகம் இரண்டாவது வாரமாகவும் நீடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையேதான் தற்போது படையினரை இச்சேவையில் ஈடுபடுத்த பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertiesment