Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


சுகாதார பிரிவின் கண்காணிப்பு மீறி வரும் சுற்றுலாப் பயணிகள் 


2021-09-14 14931

 

(ஹேமந்த துசித்த குமார)

 

நாட்டிற்குள் பாதுகாப்பற்றமுறையில் சுற்றுலாப்பயணிகள் அழைத்துவரப்படுவதன் ஊடாக  எதிர்வரும் நாட்களில் ஆபிரிக்காவில்  அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ்  பரவலடைவதற்கான  சாத்தியம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில்  கொழும்பில்  இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த  பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர்  உபுல் ரோஹன இதனை  தெரிவித்துள்ளார்ஆபிரிக்காவில்  திரிபடைந்துள்ள  வைரஸ் பரவலடைவதனை  தடுப்பதற்கு சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்.எனவும் குறிப்பிட்டுள்ளார்

நாட்டிற்குள் தற்போது  இந்திய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் வருகை தருகின்ற நிலையில் . அவர்கள்  நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டின் சுற்றுலா துறையின் வருமானத்தை  கருத்திற்கொண்டு இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் அவை அனைத்தும் பாதுகாப்பான முறையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். எனபொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர்  உபுல் ரோஹன  தெரிவித்துள்ளார்

Advertiesment