பிரான்ஸில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான புனித பவுலின் ஆலயத்திற்குள் எவ்வாறு தீ பரவியது என்பது குறித்த விசாரணைகள் பலகோணங்களில் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இந்த தீ பரவலானது திட்டமிட்ட வகையில் சிலரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆலய நிர்வாகதரப்பு சார்பான சட்டத்தரணிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 7 மணிநேர தீவிர போராட்டத்திற்குப் பின்னர் இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள இந்த ஆலயமானது பழைமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தீ பரவல் காரணமாக ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
Lanka Newsweek © 2026