Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


ஐ.தே.கவை அழிக்க முயற்சித்த அனைவரும் மரணமே எஞ்சியது


2020-06-06 14895

தேசத்தின் தந்தை ஐ.தே.கவை மதமாகவே உருவாக்கினார்

 

ஐ.தே.க அரசை துச்சமாக மதித்து ஜனாதிபதிக்கு தாரைவார்த்தார் சஜித்

 

ஜனாதிபதியின் பதவிப்பிரமாண நிகழ்வுக்கு 19க்கு அமையவே சென்றோம்

 

பொருளாதார தொற்றுக்கு ரணில்-ஐ.தே.கவுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்

 

நாட்டை வைத்து ஐ.தே.க குறுகிய அரசியல் நோக்கமாக செயற்படாது

 

ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தொழிப்பதற்கு சூழ்ச்சி செய்த அனைவரது தலைவிதியும் இறுதியில் மரணத்திலேயே முடிந்தது என்று என்பது அரசியல் வரலாற்றில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டின் விடுதலை, உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்காக மட்டுமல்லாமல் தேசத்தின் ஐக்கியம் உட்பட புனிதமான தேசிய, அரசியல், சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நோக்கங்களை நிறைவுசெய்து கொள்வதற்காக மான்புமிகு டி.எஸ். சேனாநாயக்கவினால் சுபநேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க எத்தணிக்கின்றவர்கள் வரலாற்றுப் பாடங்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் வீழவில்லை, 19ஆவது திருத்தத்தின் ஊடாக பலம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அரச அதிகாரத்தை துச்சமாக மதித்து அதனை ஜனாதிபதிக்கு வழங்கியது சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிப்பிரமாண நிகழ்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதிநிதிகள் 19ஆவது திருத்தத்தின் ஊடான இராஜதந்திர, அரசமுறை சம்பிரதாயத்திற்கு அமைவாகவே கலந்துகொண்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

 


 

Advertiesment