தாம் எங்கும் ஒளிந்திருக்கவில்லை என்றும், மக்களோடு மக்களாகவே இருந்ததாகவும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜராகிய பின் அங்கிருந்து வெளியேறிய அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவதையும் உறுதிசெய்தார்.
மேலும் கடந்த வாரம் விடுக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக ரிட் மனுவொன்றை தாம் தாக்கல் செய்திருந்ததாகவும், அதன் தீர்ப்பு வரும்வரை அமைதியாக இருந்ததாகவும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்
Lanka Newsweek © 2026