Thursday 19th of September 2024

English Tamil
Advertiesment


சாதிக்க போராடும் வீராங்கனை நந்தினியின் கதை


2019-12-31 14323

எந்த ஒரு ஆதாரமும், பின்னணியும் இல்லாமல் வென்றவர்கள் மற்றும் வெல்ல நினைப்பவர்கள்தான் இந்த பூமியின் எல்லா துயரங்களையும், அவநம்பிக்கைகளையும் உடைத்து சாதித்து காட்டுவோம் என்ற நம்பிக்கையைத் தூண்டுகிறார்கள்.

ஒரு கார்கூட எளிதில் நுழைய முடியாத மிக சிறிய சாலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் 23 வயது பெண் நந்தினி அப்படிப்பட்டவர்தான்.

மிகவும் எளிய பின்னணியில் பிறந்து வாழ்ந்து வரும் நந்தினி, தன் வயதையொத்த ஆண், பெண்களிடம் இருந்து மாறுபட்டு நிற்பது அவரால் கால்பந்து விளையாட்டு திறமையால்தான்.

''எனக்கு எல்லாமே கால்பந்து விளையாட்டு மட்டுமே. இடி மழை, சுள்ளுனு அடிக்கிற வெயில், கொட்டுற பனி எல்லாத்தையும் இதுக்காக தாங்கிப்பேன். எழுந்திருக்கவே முடியாத காய்ச்சல் வந்தாலும், கோல்-னு மைதானத்தில் எப்போதும் ஒலிக்கும் குரல்கள் என்னை எழுந்திருக்க மட்டுமில்லை ஓடவே வைச்சிரும்'' தனது விளையாட்டின் மீதுள்ள தீராத காதலை வார்த்தைகளாக நம்மிடம் வெளிப்படுத்தினார் நந்தினி.

2018-ஆம் ஆண்டில் ஒடிசாவில் நடந்த தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு வென்று சாதனை படைத்தது. இந்த அணிக்குத் தலைமை தாங்கியது நந்தினி.

''மறக்கவே முடியாத வெற்றி அது. பள்ளி, பல்கலைக்கழக, தேசிய அணிகளில் விளையாடி பல வெற்றிகளைக் குவித்த போதிலும், முதல்முறையாகத் தமிழக அணி தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்பை வென்றது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது'' என்று கூறினார்.

''என் ஆதர்ச வீரர் மெஸ்ஸி; அவரது அற்புதமான ஷாட்கள், ஆட்ட நுணுக்கங்களை நாள் முழுவதும் என்றாலும் பார்த்து கொண்டிருப்பேன்'' என்று சிரித்து கொண்டே கூறும் நந்தினிக்கு மெஸ்ஸி போல ஆட வேண்டும் என்பதே நீண்ட நாள் கனவு.

 

Advertiesment