Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


மஹிந்தவை சந்தித்த சீன,இந்திய தூதுவர்கள்


2019-12-19 14860

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங்சந்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்திய அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் சந்து இதன்போது வழங்கிவைத்தார்.

இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சுவான் தலைமையிலான குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று முற்பகலில் இடம்பெற்றது.

குறிப்பாக தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற சீன அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இங்கு பேசப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் மேலும் பல திட்டங்கள் அடுத்தவருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்நாட்டுத் தூதுவர், பிரதமரிடம் இந்த சந்திப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

Advertiesment