அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 70 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 20 வீடுகள் முழுமையாகவும்,934 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 50 இற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயிரத்து 2 ஆயிரத்து 609 குடும்பங்களைச் சேர்ந்த 8ஆயிரத்து 553 பேர் நாடளாவிய ரீதியில் 90 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் கிழக்கு மாகாணத்துக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் இரண்டாயிரத்து 59 பேரும், வட மாகாணத்தில் 50 ஆயிரத்து ஆயிரத்து 453 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 242 பேரும், மத்திய மாகாணத்தில் ஆயிரத்து ஆயிரத்து 300 பேரும்,
வடமேல் மாகாணத்தில் 5ஆயிரத்து 100 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மாகாணங்களில் பெருமளவான பாதிப்புகள் இன்னும் இடம்பெறவில்லை.
அதேவேளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
Lanka Newsweek © 2026