Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திற்கு


2019-10-17 14883

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழு ஆதரவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

1988ஆம் ஆண்டில் ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருமாதத்திற்கு முன் இரத்தினபுரியில் இடைத்தேர்தல் ஒன்று இடம்பெற்றதை நினைவூட்டிய அவர், அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான் பெருவெற்றி பெற்றதாக சுடடி;க்காட்டியதோடு அந்த பெறுபேற்றையே பலரும் நம்பிக்;கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் ஆர். பிரேமதாஸ வெற்றியைப் பதிவுசெய்ததாகவும், பென்தர, எல்பிட்டிய ஆகிய பகுதிகள் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால்மிக்கதாகவே இருப்பதாகவும் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் கூறினார்.

2015ஆம் ஆண்டில் 09 மாகாண சபைகளில் 08 சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே கைப்பற்றிக்கொண்டது. இருந்த போதிலும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தங்களது கட்சியே வெற்றியீட்டியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவும் ஐக்கிய தேசிய முன்னணிக்கே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Advertiesment