Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு யோசனை நிராகரிப்பு..!


2019-09-19 14877

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் யோசனை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

முதலில் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வோம். வெற்றிபெற்ற பின்னர் ஜனாதிபதி முறைமை குறித்து முடிவுசெய்வோம் என்பதே இன்றைய அமைச்சரவையில் கலந்துகொண்ட பலபேருடைய கருத்தாக அமைந்ததாக சொல்லப்படுகின்றது.

அமைச்சர்கள் மங்கள , மலிக் ,மனோ ,ஹக்கீம் உட்பட்ட பல அமைச்சர்கள் இந்த யோசனையை எதிர்த்தனர்.பிரதமர் ரணிலுடன் சில அமைச்சர்கள் மட்டுமே ஆதரவை வெளியிட்டனர்.

இதனால் முதலில் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திவிட்டு வருமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்து விட்டார்.பிரதமர் கோரியதால் தான் தாம் இந்த அமைச்சரவையை கூட்டியதாக ஜனாதிபதி அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து ரணில் மற்றும் சஜித் அணிகளுக்கிடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

 

Advertiesment