வெளிநாடுகளில் பலர் விரும்பி சாப்பிடும் பழத்தில் ஒன்றாக கிரான்பெர்ரி இருக்கின்றது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு குறிப்புகளில் பெரிதும் பயன்படுகின்றது.
கிரான்பெர்ரி ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அதிக அளவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் உள்ளன.
அந்தவகையில் கிரான்பெர்ரியை வைத்து முகப்பரு மற்றும் தலை முடிப் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை பற்றி பார்ப்போம்.
சிறிதளவு கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காட்டன் ஒன்றை நனைத்து பருக்கள் இருக்கும் இடத்தில தடவுங்கள். காய்ந்த பிறகு சுத்தமான நீரில் கழுவுங்கள்.
கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்து அதில் காட்டனை நனைத்து முகத்தில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவுங்கள்.
சிறிதளவு கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் கடலைமாவு எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் மாஸ்க் போல் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கிரான்பெர்ரி ஜூஸ் உடன் தயிர் எடுத்து கலக்கி கொள்ளுங்கள். முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை நீங்கள் தினமும் செய்யலாம்.
கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்துக் கொண்டு அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் கலந்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கிரான்பெர்ரிகளின் ஜூஸ் எடுத்துக் கொண்டு அதனை முட்டையின் வெள்ளை கருவில் கலந்து உங்கள் முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். மேலும் இதனை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.
கிரான்பெர்ரி ஜூஸ் மற்றும் ஒரு கப் மயோனைஷ் எடுத்து கலந்து கொள்ளுங்கள். முடியின் வேர்களில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முடி பளபளப்பாக மாற்றி விடும்.
சுத்தமான கிரான்பெர்ரி ஜூஸ் எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி உங்கள் முடியின் மேல் தடவி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை நீங்கள் அடிக்கடி செய்தால் உங்கள் முடி இயற்கையான முறையில் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
Lanka Newsweek © 2026