நாட்டிற்கு முன்வரவிருக்கும் நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான கொள்கைத் திட்டத்தை வகுப்பதற்கு எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்த விசேட அரசியல் கலந்துரையாடல் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய தலைமையில் திங்கட்கிழமை (10) கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு 05, அமரசேகர மாவத்தையில் உள்ள கரு ஜயசூரியவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரியவுடனான கலந்துரையாடலின் போது, ஒரு நாடாக இலங்கை இன்று எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்ளக் கூடிய செயலூக்கமான பொதுச் சக்தியொன்றை கட்டியெழுப்புவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இந்த பேச்சுவார்த்தையை தொடர வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயசேகர மற்றும் தேசிய இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
Lanka Newsweek © 2024