Monday 6th of December 2021

English Tamil
Advertiesment


அரசை எதிர்த்து சஜித் அணி கொழும்பில் போராட்டம்..!


2021-11-17 5802

 

அரசாங்கத்திற்கு எதிராக சஜித் தலைமையிலான எதிர்க்கட்சியினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட இருந்த ஆர்ப்பாட்டம் சற்றுமுன் ஆரம்பமானது.

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொரளையில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் வருகைத்தந்து இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வருகைத்தந்த மக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கையை தடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் மஹிந்தவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பொரளை பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள் கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரியவினால்   நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

Advertiesment