Tuesday 7th of December 2021

English Tamil
Advertiesment


மக்கள் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது..!


2021-11-13 5795

 

எந்த சலுகையும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை

 

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கும் நாட்டின் சாதாரண மக்களுக்கும் தொடர்பில்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறை வரவு செலவுத் திட்டம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போனது. இதற்கு எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கின்றன.

அரசாங்க வருமானம் 500 பில்லியனால் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்த போதிலும், அந்த வருமானம் குறைவதற்கு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே பிரதான காரணமாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை போக்க நீண்ட கால திட்டத்தை மக்கள் எதிர்பார்த்த போதிலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறானதொரு விடயம் இல்லை மாறாக 2010 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சலுகைகள் அற்ற வரவு செலவுத் திட்டமாக இது உள்ளது.
 

Advertiesment