Friday 17th of September 2021

English Tamil
Advertiesment


கோட்டாவை புகழ்ந்த ஜெனீவா- சற்று அழுத்தமும் கொடுத்தார்


2021-09-14 1129

 


எனது அலுவலகம்,; ஜெனீவா தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்;பித்துள்ளது. ஒரு ஆரம்பகட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐநாவிடம் ஏற்கனவே உள்ள 120,000 தனிப்பட்ட பொருட்களை அடிப்படையாக கொணடு நாங்கள் ஏற்கனவே தகவல் மற்றும் ஆதார களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம் இந்த வருடம் எங்களால் முடிந்தளவிற்கு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

ஐநா மனித உரிமை பேரவையில் நேற்று இலங்கை குறித்து வெளியிட்ட வாய்மூல அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

இலங்கை குறித்து மனித உரிமைகள் பேரவை மற்றும் எனது இறுதி அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட போக்குகள் மற்றும் விவகாரங்கள் தொடர்பில் புதிய தகவல்களை வெளியிடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த மேலதிக தகவல்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் உள்ளீடுகளை அனுப்பியதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்,மேலும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக அரசாங்கம் ஐக்கியநாடுகளுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளது இதற்கான நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராகவுள்ளது என இலங்கை ஜனாதிபதி ஜூன் மாதத் தெரிவித்துள்ளதையும் நான் கவனத்தில் எடுத்துள்ளேன்,இதுதொடர்பில் நாங்கள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் பல்வேறு மனித உரிமை பொறிமுறைகளால் செய்யப்பட்ட பரிந்துரைகளை பின்பற்றி வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை எதிர்பார்த்திருக்கின்றேன்.

இந்த விடயத்தில் எனது அலுவலகம் இணைந்து செயற்பட தயாராகவுள்ளது.

2021 இல் வெளியிடப்பட்ட தேசிய விசாரணை ஆணையகத்தின் அறிக்கைகளை விரைவாகவும் பகிரங்கமாகவும் வெளியிடுவதை நான் ஊக்குவிக்கின்றேன். இந்த வருட இறுதிக்குள் அந்த ஆணையகம் தனது ஆணையை நிறைவேற்றும் என என்னால் அறியமுடிந்துள்ளது.இதன் காரணமாக அதன் பணிகள் மற்றும் பரிந்துரைகளை அறிந்துகொள்ளமுடியும்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சமூக பொருளாதார மற்றும் நிர்வாக சவால்கள் இராணுவமயப்படுத்தல் மற்றும் பதிலளிக்கும் கடப்பாடின்மை ஆகியவற்றினால் அடிப்படை உரிமைகள்,குடிமைகளிற்கான இடம்,ஜனநாயக ஸ்தாபனங்கள் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பேண்தகு அபிவிருத்தி ஆகியவை எதிர்கொண்டுள்ள மோசமான பாதிப்பை குறிக்கின்றது. இலங்கையில் பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்து வரும் நிலையில் உணவுப்பாதுகாப்பு விலைக்கட்டுப்பாடு ஆகியவற்றினை உறுதி செய்யும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 30 ம் திகதி புதிய அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது.

இந்த அவசரகாலவிதிமுறைகள் மிகவும் பரந்துபட்டவை மற்றும் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவத்தின் செல்வாக்கை அதிகரிக்ககூடியவை. சிவில் சமூக தலைவர்களுடனான ஜனாதிபதியின் சமீபத்தைய சந்திப்பை நான் ஆர்வத்துடன் அவதானித்துள்ளேன்,இலங்கையின் குடிமை வெளியை விஸ்தரிப்பதற்கு பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு நான் ஊக்குவிக்கின்றேன். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் காணாமல்போனவர்களின் உறவுகள் எதிர்கொண்டுள்; கண்காணிப்பு அச்சுறுத்தல் நீதித்துறை கண்காணிப்பு ஆகியன கவலை தரும் விதத்தில் தொடர்வதுடன் மாணவர்கள் கல்விமான்கள் மருத்துவர்கள் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிக்கும் மதத்தலைவர்கள் என பரந்துபட்ட சமூகத்தை நோக்கி விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

பல அமைதியான போராட்டங்கள் மற்றும் நினைவுகூறல்கள் அதிகளவு பலத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிவில் சமூகத்தினர் தொடர்பான புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன,அவை அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமானதாக்கப்போகின்றன,என்ற அச்சம் பரவலாக காணப்படுகின்றது. அந்த வரைவு சாத்தியமான அளவு பொது விவாதத்தை அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். பல அதிகளவு கவனத்தை ஈர்த்த மனித உரிமை சம்பவங்கள் குறித்த நீதித்துறை நடவடிக்கைகளில் உருவாகியுள்ள நிலைமை குறித்து நான் கவலை அடைந்துள்ளேன்.

2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில்11 பேர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கைவிடுவது என்ற சட்டமா அதிபரின் தீர்மானமும் ஒன்றாகும். பல விசாரணைகளிற்கு அப்பாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களும் மதத்தலைவர்களும் உண்மை மற்றும் நீதி உடனடியாக நிலைநாட்டப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். அந்த தாக்குதல் நிகழ்வதை சாத்தியமாக்கிய முழுமையான சூழ்நிலையை பகிரங்கப்படுத்தவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2011 இல் அரசியல்வாதியொருவரை கொலை செய்தமைக்காக தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியின் சமீபத்தைய பொதுமன்னிப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி செயல்முறையின் மீது நம்பிக்கையை சிதைக்கும் அபாயம் உள்ளது.

பொலிஸ்காவலில் மேலும் இறப்புகள் மற்றும் போதைப்பொருள் குழுக்கள் மீதான பொலிஸ் என்கவுன்டர்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் தொடர்ச்சியான சித்திரவதைகள் மோசமான நடவடிக்கைகள் குறித்து நான் கவலையடைகின்றேன். மார்ச் மாதத்தில் புதிய தீவிரமயமாக்கல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன இது தனிநபர்களை இரண்டுஆண்டுகள்வரை தன்னிச்சையாக நிர்வாக காவலில் வைக்க அனுமதிக்கின்றது,இந்த உத்தரவை எதிர்த்து அடிப்படை உரிமைகள் தாக்கல் செய்யப்பட்டவேளை நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது என்பதை நான் அவதானித்துள்ளேன். ஜூன் மாதத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டணை முடிவடையும் தறுவாயிலிருந்த 18 கைதிகளிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

இழப்பீடுகளிற்கான தேசிய கொள்கை ஆகஸ்ட்மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது,மேலும் இழப்பீடு கொடுப்பனவு திட்டங்கள் நல்லிணக்க திட்டங்கள் தொடர்கின்றன. காணாமல்போனோர் குறித்த அலுவகம் தொடர்ந்து செயற்பட்டுவருகின்றது,கிளிநொச்சியில் ஆறாவது பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டது ஆனால் அது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஊக்குவிக்கவேண்டும்.பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய பாலின உணர்திறன் அகுமுறைகளின்முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். மேலும் பரிகார திட்டங்கள்பரந்துபட்ட நீதிமற்றும் உண்மை நடவடிக்கைகளுடன் இணைந்ததாகயிருக்கவேண்டும்.

இந்த பின்னணியில் எனது அலுவலகம்; 46-1 தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்;பித்துள்ளது, ஒரு ஆரம்பகட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐநாவிடம் ஏற்கனவே உள்ள 120,000 தனிப்பட்ட பொருட்களை அடிப்படையாக கொணடு நாங்கள் ஏற்கனவே தகவல் மற்றும் ஆதார களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம் இந்த வருடம் எங்களால் முடிந்தளவிற்கு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். வரவுசெலவுகள் தொடர்பாக தேவையான ஆதரவை அளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

 

Advertiesment