Friday 17th of September 2021

English Tamil
Advertiesment


ஐதேக மாகாண சபை உறுப்பினர்கள் மறுசீரமைப்பாளர்களுடன்


2021-09-13 1016

 


கரு-ரவி-நவீன்-அர்ஜுன இன்றி கட்சிக்கு எதிர்காலம் இல்லை

 


ருவன்-வஜிர-அகில-ரங்கே மக்கள் நிராகரிக்கின்றனர்

 


ஐதேக புதிய அதிகாரிகளுடன் புதுப்பயணம் இல்லை

 

 
(பிரமோத்யா லியனகே)

 


ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பிர்களின் பெரும்பாலானவர்கள் கட்சியின் மறுசீரமைப்பு தரப்பினர்களாகிய ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டவர்களுடன் இணைந்துகொண்டிருக்கின்றனர்.

அத்துடன் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய மீதும் அவர்கள் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பிர்கள், தேசபந்து கரு ஜயசூரிய-ரவி கருணாநாயக்க- நவீன் திஸாநாயக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டவர்கள் இன்றி ஐக்கிய தேசியக்கட்சிக்கு  அரசியல் பயணமொன்று இல்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தலைமைத்துவத்தை நிராகரிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பிர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, உப தலைவர், அக்கிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை எனவும் அவர்கள் கூறினர்.

இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிகரமானப் பயணத்திற்கு தேசபந்து கரு ஜயசூரிய-ரவி கருணாநாயக்க- நவீன் திஸாநாயக்க மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertiesment