Friday 17th of September 2021

English Tamil
Advertiesment


அரச சேவை கூட்டு நண்பர்களுக்கு மட்டு


2021-09-10 1035

 


அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளை ஐமச செய்கிறது

 


கூட்டு நண்பர்-உறுப்பினர்களை ஊக்குவிப்பதை நிறுத்துக

 

(லும்பினி பிரமோத்யா)


நாட்டிற்கும், பொது மக்களுக்கும் சேவை செய்வது அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கம் சேவை செய்வது நாட்டிற்கும் மக்களுக்கும் அன்றி தமது நட்பு வட்டாரங்களுக்கே செய்கின்றது என்று எதிர்கட்சித்தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய ஆடே்சியின் கீழ் பதிவுகள் அழிகின்றமை, அன்டிஜன் மோசடி, ஔடத மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் வெற்றிகரமாக இடம்பெறுவதோடு அந்த அனைத்து அழிவுகளுக்கு மத்தியிலும் மக்கள் மிகுந்த நெருக்கடியில் கஸ்டப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் கூறுகின்றார்.

“எதிர்கட்சியிடமிருந்து மூச்சு” என்கின்ற 25ஆவது வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை வைத்தியசாலைக்கு 30 இலட்சத்து 90 ஆயிரம் பெறுமதியான சுகாதார சேவை உபகரணங்களை அன்பனிப்பு செய்த நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டத்தின்கீழ் இதற்கு முன்னதாக ஏழு கோடியே பத்தொன்பது இலட்சத்து நான்காயிரம் ரூபா (ரூ.. 71,904,000) பெறுமதியான உபகரணங்கள் அன்பளிக்கப்பட்டுள்ளன.

இலஞ்சம், மோசடி, ஊழல்களைக் கண்டுகொள்ளாத இந்த அரசாங்கம் உள்ளதோடு நாட்டில் அமுலாக வேண்டிய ஜனநாயகவாத செயற்பாடுகள் அனைத்தும் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியே செய்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடிமிக்க சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி பணிகளுக்காக மேற்பாவ்வை செய்கின்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அதற்கான மக்கள் பணத்தை விரயம் செய்வரும் ஏற்றுக்கொள்ள முடியாதொன்று. மக்கள் மீது உண்மையான பற்று அரசுக்கு இருந்தால் உறுப்பினர்களை போஷிப்பதை விட மக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

 

Advertiesment