Friday 17th of September 2021

English Tamil
Advertiesment


நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 2,833.5 டொலர் மில்லியன்வரை வீழ்ச்சி


2021-08-18 1089

 


அரச வங்கிகளுக்கு 10%க்கும் குறைந்த டொலர் இருப்பு தட்டுப்பாடு

 


டொலர் இன்றி துறைமுக கொள்கலன்களும் தேக்கம்

 


(லும்பினி பிரமோத்யா லியனகே)

 


இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு செலாவணி இருப்பு தற்போதுவரை 2833.5 மில்லியன் டொலர்வரை குறைந்திருப்பதாக அரசியல்-பொருளாதார விமர்சகராகிய ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கின்றார்.

அரச வங்கிகளில் மாதாந்தம் பெறுகின்ற டொலர் அவசியப்பட்டில் பத்துவீதத்திற்கும் குறைந்த நெருக்கடிநிலைமை ஏற்பட்டுள்ளதோடு, டொலர் இல்லாமையினால் துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கியிருப்பதாகவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் இராஜாங்க நிதியமைச்சர் மூன்று மாதங்களில் கிடைக்கின்ற 2.6 பில்லியன் டொலர்கள் பற்றி பகல் கனவைக் கண்டுவருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நன்மைக்காக எதிர்காலத்திற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) இடம் செல்வதா? அல்லது இல்லையா என்பது பற்றியல்லாமல் நாட்டில் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக டொலர்களை தேடுவதற்காக முயற்சிகளை எப்படி அரசாங்கம் செய்யப்போகின்றது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.

 

 

Advertiesment