Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


ஐமச கட்சியின் எதிர்காலம் சஜித்தின் நடத்தையில் தீர்வாகும்


2021-06-10 1202

ரணில் என்பது பாரம்பரிய பிரபு வரிசையின் அழிவு

 

சந்தர்ப்பம் காரணமாகவே சஜித்தை 2019இல் தெரிவுசெய்தோம்

 

 

(சுஜித் மங்களடி சில்வா)

 

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடத்தை மற்றும் ஏனைய விடயங்களை வைத்தே ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் ஸ்தாபகருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது இருந்த சிறந்த மாற்றுத் தெரிவாகவே சஜித் பிரேமதாஸவை தெரிவுசெய்ததாகவும், தாம் எந்த சந்தர்ப்பத்திலும் எவர் மீதுமு் சேறுபூசுதலை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக ரீதியில் இடம்பெறுகின்ற சூழ்ச்சி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சஜித் பிரேமதாஸவுக்குப் பதிலாக ரணில் விக்கிரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனவா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதற்காக முன்னணியில் நின்று பேசியது தாமே என்று சுட்டிக்காட்டியதோடு, மற்றைய எவருக்கும் எதிராக தாம் ஒருபோதும் சூழ்ச்சி செய்யப்போவதில்லை எனவும் கூறினார்.

எந்த நபர் பற்றியும் தாம் விமர்சனம் செய்யப் போவதில்லை என்றும், விமர்சிக்கப்பட வேண்டிய நபரது முகத்தை நேருக்குநேர் சந்தித்து அதனை சொல்வதாகவும் குறிப்பிட்ட அவர், ரணில் விக்கிரமசிங்க என்பவர் இந்த நாட்டின் பரம்பரை அரசியல் தொடரில் இருந்து வருகின்றவர் என்றும், இந்த நாட்டில் குடும்பவாத அரசியலை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertiesment