Wednesday 23rd of June 2021

English Tamil
Advertiesment


பொலிஸ் அமைச்சரின் தகனது நிச்சயதார்த்தம்


2021-06-09 1164

எனது மனைவி நடிகையல்ல- பொறியியலாளர்

 

பஸ்ஸர செல்லவில்லை - பொலிஸ் மருத்துவமனையில் இருந்தேன்

 

டாக்டர் சசித்திர வீரசேகர வாய்திறந்தார்

 

 


தனது திருமணப் பதிவு நிகழ்வானது கொழும்பில் உள்ள "Shangri-La" ஹோட்டலில் நடத்தப்படவில்லை, என்றும் தனது இல்லத்திலேயே அந்த நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் புதல்வரான டாக்டர் சச்சித்ரா வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி, 15 பேர் பங்கேற்று இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் தனது மனைவி ஒரு நடிகையல்ல என்றும் அவர் ஒரு  பொறியியலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சச்சித்ர வீரசேகர சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றிய தவறான மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரங்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவற்றை தாம் நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.

"என் தந்தை மீது சேறுபூசல்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக என்னையும் சேர்த்திருக்கின்றனர். நான் பொலிஸ் சேவையில் மருத்துவராக செயலாற்றுவது அதற்கு இன்னுமொரு சாதகமாக மாறிவிட்டது. 

எனது நிச்சயதார்த்தம் எனது தனிப்பட்ட வீட்டில் 2021.05.28 அன்று நடந்தது. தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி, 15 பேர் பங்கேற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எனது நிச்சயதார்த்த விழா "Shangri-La"  ஹோட்டலில் நடைபெற்றது என்ற தவறான மற்றும் ஆதாரமற்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் உட்பட சில ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது.

அதோடு, என் மனைவி அழகுக்கலை நிபுணர் என்றும், என் மனைவி ஒரு நடிகை என்றும் சந்திமல் ஜெயசிங்க தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் பொய். எனது மனைவி கடந்த காலங்களில் அறிவிப்பாளராக பணிபுரிந்திருந்தாலும் அவர் ஒரு பொறியியலாளர் என்று நான் சொல்ல வேண்டும். 

நான் ஒரு மருத்துவர். எனது நிச்சயதார்த்தம் பற்றி கொழும்பு பொலிஸ் மருத்துவமனைக்கு அறிக்கை செய்தேன். எனவே நான் எப்படி பஸ்ஸர செல்வது? அப்படியானால், நான் விடுமுறை எடுக்க வேண்டும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் "பதிவு புத்தகத்தில்" ("Log Book" ) எனது பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும், இல்லையா? இவை அனைத்தும் எந்த அடிப்படையும் உண்மையும் இல்லாத அவதூறான பிரச்சாரம் "

Advertiesment