Wednesday 23rd of June 2021

English Tamil
Advertiesment


சமூக ஊடகங்கள் மீது கை வைக்காதே - சஜித்


2021-06-09 1114

ஊடக அடக்குமுறைக்கு எதிராக மக்களை தூண்டவேண்டும்

 

அரசாங்கத்தை எச்சரித்த எதிர்கட்சித்தலைவர்

 



சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களின் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக தான் முன்நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தணிக்கை, அச்சுறுத்தல்கள், அடக்குமுறை, அழுத்தம் மற்றும் ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் தாம் நிராகரிப்பதாகவும் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சுதந்திர ஊடகங்களுக்கு எதிராக ஆயுதங்களை எடுக்கும் அடக்குமுறை திட்டத்தில் அரசாங்கம் உள்ளது. அதன் மற்றொரு நடவடிக்கையாக இப்போது சுதந்திர ஊடகங்களையும் சிதைக்கத் தொடங்கியுள்ளது என்பதையும் தெளிவாகக் கூற வேண்டும்.

அரசாங்கம் அதிருப்தியாளர்களைத் தகர்த்தெறிவது இது முதல் முறை அல்ல. ஊடகங்களுக்குத் தேவைப்படுவது சுய தணிக்கைதான், மாறாக அரசின் செல்வாக்கு அல்லது அதன் வேறு வகையிலான கட்டுப்பாடுகள் அல்ல.

ஊடக சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக நாங்கள் நிபந்தனையின்றி நிற்கிறோம், மேலும் அனைத்து வகையான தணிக்கை, அச்சுறுத்தல், அடக்குமுறை, அழுத்தம் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நாங்கள் நிராகரிக்கிறோம்.

ஒவ்வொரு ஆட்சியாளருக்கும், சுதந்திர ஊடகங்களை எதிர்த்த ஒவ்வொரு ஆட்சிக்கும் ஏற்பட்ட தலைவிதிக்கு வரலாறினை நாம் அறிவோம். மேலும் அனைத்து ஊடகங்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாம் முன்னணியில் இருக்கிறோம்.

 

Advertiesment