Wednesday 23rd of June 2021

English Tamil
Advertiesment


சமுதித்தவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் பியுமி,சந்திமால்


2021-06-09 1140

தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி மற்றும் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங் ஆகியோர், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம, நீதிமன்றத்தினை அவமானப்படுத்தும் வகையில்  "YouTube" வலைத்தள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் வகையிலும் நடந்திருப்பதாக சந்திமால் ஜயசிங்கவின் சட்டத்தரணி தெரிவிக்கின்றனர்.

சமுதித்த சமரவிக்ரம நீதிமன்றத்தை அகௌரவப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டது மாத்திரமன்றி முகக்கவசம் இன்றி  "YouTube" தளத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதால் அவரும் தனிமைப்படுத்தல் சட்த்தை மீறியதாக சுட்டிக்காட்டுகின்ற சந்திமாலின் சட்டத்தரணிகள், அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சட்டத்தரணிகள், கொழும்பு புறக்கோட்டை பொலிஸார் மற்றும் இரகசிய பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்திருப்பதோடு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவிடத்திலும் எழுத்துமூல கோரிக்கை ஒன்றையும் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertiesment