Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


சஜித்துடன் SF கடும் மோதலில்


2021-06-02 5530

மைத்திரி-சஜித் "Deal" எதிராக பீல்ட் மார்ஷல் போர்க்கொடி

 

சஜித் ஜனாதிபதியானவுடன் மைத்திரி பிரதமர்?

 

சந்தேகத்தில் அதிர்ந்தது ஐமச - SF பிரதமர் போராட்டத்தை ஆரம்பித்தார்

 

கோட்டாவின் வலதுகை டிரானுடக் சஜித் தொடர்பு?

 

 

எதிர்கட்சித்தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவம் மற்றும் அவரது செயற்பாடுகள் கறித்து அக்கட்சியின் தவிசாளராகிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வைத்திருந்த நம்பிக்கை தற்போது வீழ்ச்சியடைய ஆரம்பித்திருக்கிறது. 

ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு, அரசியல் ரீதியில் தாக்குதல்களை நடத்தி, நாட்டினை அநாதையாக்கிவிட கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வழிவகுத்த முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன் திரைக்குப் பின்னால் உள்ள அரசியல் கொடுக்கல் வாங்கல் தொடர்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதுமட்டுமன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 2021.05.19 அன்று நடைபெற்ற தேசிய இராணுவ தினத்தை பகிஸ்கரிக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா உட்பட கட்சியின் பலரும் தெரிவித்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் சஜித் பிரேமதாஸ தனியே சென்று அதில் பங்கேற்றிருந்தார்.

இதேவேளை, சஜித் பிரேமதாஸ என்றாவது ஒருநாள் ஜனாதிபதியானால், பிரதமராக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பார் என்ற சந்தேகத்தில் கட்சியின் பலரும் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர், "lankanewsweek" இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அத்துடன் எவரும் நம்பமுடியாத மோசடி தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினருமான டிரான் அலஸுடன் சஜித் பிரேமதாஸ நெருக்கமான தொடர்பினைப் பேணிவருவதுவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பலராலும் எதிர்க்கின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அரசியல் உறவாளர்கள், அவரது ஆலோசனை, அணுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ் “சரத் பொன்சேகாவை பிரதமராக்குவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். 

 

Advertiesment