Wednesday 23rd of June 2021

English Tamil
Advertiesment


ஐமச திவுலப்பிட்டிய உறுப்பினர் பாகேஸ்வரி குணசேகர கைது


2021-06-02 5451

அவரது கணவர் சமல் குணசேகரவும் பிடிபட்டார்

 

கொரோனா சட்டத்தை மீறி "Shangri-la"வில் பிறந்தநாள் கொண்டாட்டம்

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மேலும் 06 பேர் கைது

 

 

கொழும்பு "Shangri-la" விடுதியில் அண்மையில் ந்நத சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கலந்துகொண்டவர்களில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான பாகேஸ்வரி குணசேகர மற்றும் அவரது கணவரான சமல் சுஷாந்த ஆகியோம் இருப்பதாக தெரிவிக்கப்படுவதோடு அதனை மூடிமறைக்க பிரதேச சபை உறுப்பினரான மதுஷிகா குணசேகரவின் பெயரிலும், அவரது கணவராக சமல் சுஷாந்தவும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி 2021.05. 30 அன்று "Shangri-la"  ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Advertiesment