Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


சஜித்திற்கு எதிராக மஹிந்த-ரணிலுடன் Deal செய்யும் சஜித் அணியினர்


2021-06-01 5497

பாட்டலியுடன் சிலர்- சிவில் அமைப்புகளுடன் மேலும் சிலர்

 

பீல்ட் மார்ஷல் தனிவழியில்

 

சஜித்துடன் முடியாது என்போர் குழுக்களாக

 

அநாதையாகிய சஜித் - ஐ.ம.சக்தி வெறுமையாகியது

 

ஜலனி பிரேமதாஸ - லக்ஷ்மன் பொன்சேகா நிராகரிப்பு

 

“தகவல் பொய் என்றால்  "lankanesweek" மூடப்படும்”

 

 

(சுஜித் மங்கள டி சில்வா)

 

எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமமாஸவின் தலைமைத்துவம், அவரது இலக்குகள், வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்டிருக்கின்ற அக்கட்சியைச் சேர்ந்த மற்றும் கட்சியுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களது பெயர் அம்பலமாகியிருக்கின்றது.

 

(01) பாட்டலி சம்பிக்க ரணவக்க

 

(02) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

 

(03) ஹரின் பெர்ணான்டோ

 

(04)மருத்துவர் ராஜித சேனாரத்ன

 

(05) திஸ்ஸ அத்தநாயக்க

 

(06) முஜிபுர் ரஹ்மான்

 

(07) துஷார இந்துநில்

 

(08) எரான் விக்கிரமரத்ன

 

(09) மனோ கணேசன்

 

(10) ரவூப் ஹக்கீம்

 

(11) கபீர் ஹாஷிம்

 

(12) அசோக் அபேசிங்க

 

(13) ரிஷாட் பதியூதீன்

 

(14) ஹேஷா வித்தானகே

 

(15) சமிந்த விஜேசிறி

 

(16) மனூஷ நாணயக்கார

 

(17) பழனி திகாம்பரம்

 

(18) மயந்த திஸாநாயக்க

 

(19) ஹர்ஷடி சில்வா

இவர்களிடையே சிலர் புதிய அரசியல் தலைமைத்துவம் மற்று்ம அரச எதிர்ப்பு அரசியல் அமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்து, அதற்காக செயற்படுதல் மற்றும் தலையீடுகளை செய்து வருவதாகவும், இன்னும் சிலர் அரசாங்கத்துடன் அரசியல் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டும் வருகின்றனர். மேலும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய அரசியல் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருப்பதோடு, எஞ்சிய சிலர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

கடந்த பல மாதங்களாக பல்வேறு மார்க்கங்களில் மிகவும் இரகசியமாக "lankanesweek" முன்னெடுத்த புலனாய்வின் ஊடாக இந்த தகவல்கள் 100 வீதம் நம்பிக்கை சார்ந்ததாக கிடைத்திருக்கின்ற நிலையில், இந்தத் தகவல்களானவை  முழுமையான உண்மையில்லை என்பதை நிரூபித்தால், "lankanesweek" இணையத்தளத்தை முற்றாக நிறுத்திவிடவும் நாம் வாக்குறுதி அளிக்கின்றோம்.

மேற்படி உறுப்பினர்களிடையே சிலர் ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மற்றும் பஷில் ராஜபக்ஷவுடனும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மற்றும் 43ஆவது படையணியின் ஸ்தாபகராகிய பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடனும், சிலர் சிவில் அமைப்புக்களுடனும் விரைவில் ஒன்றுசேரவிருக்கின்றனர் என்கின்ற தகவலை "lankanesweek" விரைவில் அம்பலப்படுத்தும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

குறிப்பிட்ட உறுப்பினர்கள் இவ்வாறு அதிருப்தியடையக் காரணம், எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அவரது இலக்கு, வேலைத்திட்டம், செயற்பாடுகள் மாத்திரமன்றி, குறிப்பாக அவரது மனைவியான ஜலனி பிரேமதாஸ மற்றும் அவரது நெருக்கமான நண்பரான லக்ஷ்மன் பொன்சேகாவின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Advertiesment