Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


நாடாளுமன்ற கொத்தணியை சபாநாயகரே உருவாக்கினார்


2021-06-01 5447

சடலங்கள் மீதேறி "Port City"  சட்டத்தை அமுல்படுத்துவதே அரசின் திட்டம்

 

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் யோசனையும் நிராகரிப்பு

 

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திலும் கொரோனா கொத்தணி ஏற்பட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே காரணம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிமிக்க நிலைமைக்கு அவரே காரணம் எனவும் எதிர்கட்சிப் பிரதம கொறடாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டுகின்றார்.

சபாநாயகரது அலுவலகம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் மற்றும் படைக்கள சேவிதர் அலுவலகம் என கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டிருப்பதால், நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைக்கும்படி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகரிடம் கேட்டபோது அதனை அவர் நிராகரித்ததாகவும்  "lankanewsweek" இணையத்தளத்திடம் கருத்துவெளியிட்டபோது லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

மக்களின் சடலங்கள் மீது ஏறியேனும் கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற இலக்கில் அரசாங்கம் இருந்ததாகவும் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நாளுக்குநாள் தொற்றுக்கு இலக்காகிவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

Advertiesment