Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


மரக்கறி விலை கொழும்பில் 400 ரூபா- பதுளையில் 30ற்கும் விற்கமுடியாது


2021-05-31 5449

கெப்பட்டிபொல மொத்த விற்பனை நிலையத்தில் 6 இலட்சம் மரக்கறிகள்

 

விற்கமுடியாமல் விவசாயிகள் நெருக்கடி

 

கொழும்பு மக்களுக்கு தொட்டுப்பார்க்கக்கூட மரக்கறிகள் இல்லை

 

மக்களுக்கு உணவளிக்க திட்டம் அரசிடம் இல்லை

 


 

பதுளை - கெப்பட்டிபொல மொத்த வர்த்தக நிலையத்தில் இதுவரை விற்பனை செய்யப்பட முடியாத நிலையில் குவிந்து தேங்கிக்கிடக்கின்ற மரக்கறிகள் சுமார் 6 இலட்சம் கிலோவை எட்டுகின்றது என்று ரஜித்த கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கின்றார்.

மரக்கறி கிலோ ஒன்றின் விலை 30 ரூபாவாகின்ற போதிலும் அதனைக்கூட விற்பனை செய்ய முடியாத இக்கட்டான நிலைமைக்கு விவசாயிகள் தள்ளிவிடப்பட்டிருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டுகின்ற ரஜித்த கீர்த்தி தென்னகோன், மக்களுக்கு உணவளிப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பதுளையில் மரக்கறி கிலோ ஒன்று முப்பது ரூபாவிற்குக்கூட விற்பனை செய்ய முடியாதிருக்கின்ற போதிலும் கொழும்பு மற்றும் மக்கள் சனநெரிசல் உள்ள பிரதேசங்களில் நடமாடும் மரக்கறி விற்பனை வாகனங்களில் மரக்கறி விலைகள் 350 தொடக்கம் 400 ரூபாவரை விற்பனை செய்யப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய மாகாண விவசாயிகளுக்கு மரக்கறி விற்பனை செய்யமுடியாதுள்ளது. எனினும் கொழும்பு உட்பட பிரதேசங்களில் மக்களுக்கு உண்பதற்குக்கூட மரக்கறிகள் இல்லை. இந்தப்பிரச்சினை தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. இதனை எடுத்துச் சொல்லவும் எவரும் இல்லை. கேட்பதற்கும் எவருமில்லை. இலங்கையில் பின்னடைந்த மாவட்டமாக பதுளை மாறிவிட்டது” என்று ரஜித்த கீர்த்தி தென்னகோன் மேலும் கூறியுள்ளார்.

 

Advertiesment