Friday 14th of May 2021

English Tamil
Advertiesment


அரசுடன் இணைய வேண்டாம்: ஏர்லிடம் கெஞ்சிய சஜித்


2020-07-23 1686

செய்தியனால் குழம்பிய சஜித்


தேசியப் பட்டியல் ஆசனம் குறித்தும் சஜித் வாக்குறுதி


பதிலை வழங்கினார் ஏர்ல் குணசேகர

 


(சுஜித் மங்களடி சில்வா)


அரசாங்கத்துடன் இணைவது குறித்த தீர்மானத்தை நிறுத்தி கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, அக்கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளரான ஏர்ல் குணசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சஜித்தின் பட்டியலை மஹிந்தவிடம் விற்று அரசுடன் இணைந்த ஏர்ல் என்ற தலைப்பில் கடந்த 22ஆம் திகதி ஏர்ல் குணசேகர அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக எமது செய்தி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அடுத்து குழப்பமடைந்த சஜித் பிரேமதாஸ, உடனடியாக ஏர்ல் குணசேகரவிடம் தொலைபேசியில் உரையாடிய அவர், இந்த வேண்டுகோளினையும் முன்வைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஏர்ல் குணசேகரவிடம் அரசாங்கத்தில் இணைய வேண்டாம் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அவர் நிச்சயமாக தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறிய நிலையில், தனது முடிவினையும் ஏர்ல் குணசேகர மாற்றிக்கொண்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சிறப்பு ஒருங்கிணைப்பின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் ஏர்ல் குணசேகர அரசாங்கத்தில் இணைகிறார் என்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கப்படும் பெரும்பான்மை அரசாங்கத்தின் கீழ் உயர் பதவியை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

சில காலமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகி இருந்த ஏர்ல் குணசேகர, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்றுகூறி போலிக்காரணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்தார். கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு நூறாயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கினார் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு உயர் அரசு பதவியை பெறுவார் என்றும் எதிர்பார்க்க்கப்பட்டது.

இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தவுடன், ஏர்ல் குணசேகரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பொதுஜன முன்னணியுடன் இணைய அழைப்பு விடுத்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்டத்தில் உள்ள ஹெவாஹெட்ட வாக்காளர்களின் தலைமை அமைப்பாளர் பதவியையும், புதிய அரசாங்கத்தில் ஒரு முன்னணி பதவியையும் அவர் நாடினார்.

இவ்வாறு அவர் அரசாங்கத்திடமிருந்து பெரிய பதவியொன்றை எதிர்பார்ப்பதாக எமது செய்தி இணையத்தளம் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

இருப்பினும், ஏர்ல் குணசேகர அவர் எதிர்பார்த்த அரசாங்கத்தின் உயர் பதவியையும் அமைப்பாளரையும் பெறுவது தாமதமாகியதோடு எனவே அவர் சஜித் பிரேமதாசவுக்கு இன்னொரு பெரிய தொகையை வழங்கினார் என்றும் அவரது அரசியல் மதிப்பை அதிகரிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் தனது பெயரைச் சேர்த்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் அவர் சம்பாதித்த அரசியல் மதிப்பு காரணமாக மீண்டும் அரசாங்கத்தில் சேர அவருக்கு அழைப்பு பறந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் சில தினங்களில் குருநாகலையில் நடைபெறவுள்ள மஹிந்த ராஜபக்சவின் பிரசாரக் கூட்டத்திலும் அவர் மேடையில் ஏறவுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகின.

Advertiesment