Wednesday 23rd of June 2021

English Tamil
Advertiesment


இணைய திருடர்களிடமிருந்து தகவல்களை பாதுகாப்பது எப்படி?


2020-07-17 5450

இணைய உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இது மிகவும் சவால் மிக்க விடயம்தான். ஆனால் சைபர்ஸ்பேஸில் உள்ள சிக்கல் என்னவென்றால், சைபர் கிரிமினல்கள் எங்கள் உடைமைகளை எந்நேரத்திலும் திருட வாய்ப்புள்ளது. ஆனால் நம் முக்கிய தரவை வேறு யாராவது திருடிவிடுவார்களென கவலைப்படாத சிலரும் இருக்கின்றனர். 

அப்படி சைபர் அட்டேக் நடந்து திருட வந்தாலும் டவுன்லோட் செய்யப்பட்ட படங்கள் மட்டுமே ஹேக் செய்யப்படும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்குதான் தவறுள்ளது. 

பெரும்பாலானோரின் தொழில் மற்றும் இரகசிய தரவுகள் ஈமெயில் கணக்கிலேயே இருக்கின்றன. இப்போது அலுவலகத்தில் வாட்ஸ்அப் குழுக்களும் இருப்பதால், அந்த செட்டிங்கில் முக்கியமான விஷயங்கள் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு உறுதியாக கூற முடியுமா? அதனால்தான் நாம் அனைவரும் நமது முக்கியமான தரவைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டுமென கூறுகின்றோம். அதன்பிரகாரம் உங்களுக்கு பயனளிக்கும் சில தரவுகளை இன்று கொண்டுவந்துள்ளோம்.

 என்க்ரிப்ஷன் அல்லது குறியாக்கம் என்பது கணினி நிபுணர்கள் மட்டுமே பயன்படுத்தும் அல்லது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயமென பலரும் எண்ணுகின்றனர். என்க்ரிப்ஷன் என்பது ஒரு டொக்கியூமெண்ட்டை அல்லது ஃபோல்டரை மற்றொரு டிவைஸினால் பார்க்க முடியாத வகையில், பாஸ்வர்டை தெரியாத நபர் அல்லது தேவையற்ற நபரால் பார்க்க முடியாத வகையில் செய்வதாகும். இப்போது, என்க்ரிப்ஷன் செய்வது மிகவும் கடினமான விடயமல்ல. ஈமையிலை இப்போது என்க்ரிப்ட் செய்வது மிகவும் எளிதானது. தானாக அனுப்பப்படும் ஈமெயிலைகூட என்க்ரிப்ட் செய்யும் திறனும் ஜிமெயிலுக்கு உண்டு.

இது பலர் கவனிக்காத மற்றும் அதிகம் தரவுப்பாதுகாப்பிற்கு உதவும் ஒரு முக்கியமான விடயமாகும். தரவு காப்புப்பிரதி அல்லது டேட்டா பேக்கப் என்பது உங்கள் தரவின் மேலதிக ஒரு பிரதியை வேறு எங்காவது வைத்திருக்கும் செயலாகும். இந்த டேட்டா பேக்கப் அந்தந்த சர்வீஸ்களின் கிளவுட் சேவையில் சேமிக்கப்படலாம். அல்லது பென்ட்ரைவ், ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைக்கலாம். எது எங்கிருந்தாலும் பரவாயில்லை தேவைப்படுவது அவற்றின் டேட்டா பேக்கப் மட்டுமே. அதற்கென்று அலட்சியமாக இருந்துவிடாமல் உங்கள் தரவுகளை என்க்ரிப்ட் செய்து வைப்பது உங்களது பொறுப்பாகும்.

Advertiesment