Friday 14th of May 2021

English Tamil
Advertiesment


அதிகமான விருதுகளைப் பெற்று ஹேமாஸ் மருத்துவமனை சாதனை


2019-10-17 1426

இலங்கையின் முதன்மையான சுகாதார சேவையை வழங்கும் முன்னணி நிறுவனமான ஹேமாஸ் மருத்துவமனை நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான பல விருதுகளை அண்மையில் வென்றுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் அதிகமான விருதுகளை வென்ற மருத்துவமனை என்ற இடத்தைப் பெற்றதை கொண்டாடும் முகமாக விசேட அதிதிகள் பலருடைய தலைமையில் நேற்று முன்தினம் ஷெங்கிரிலா ஹோட்டலில் “செத்காரயா” என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்று இடம்பெற்றது.

ஹேமாஸ் மருத்துவமனை கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக 18 முன்னணி விருதுகளை வென்று இலங்கையில் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவனை என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த விருதுகளில் சிங்கப்பூர் எல்த் கெயார் ஏஷியா என்ற 3 விருதுகளும், வியட்நாம் ஹனோயில் இடம்பெற்ற வைத்தியசாலை முகாமைத்துவ ஆசிய விருது வழங்கும் நிகழ்வில் விசேட விருதும் உள்ளடங்கும்.

அத்துடன் இந்த வருடம் பிரதான சர்வதேச விருதைப் பெற்ற ஒரே மருத்துவமனை என்ற பெயரைப் பெற்று இலங்கைக்கு மாபெரும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

உள்நாட்டு ரீதியாக தொழில் பாதுகாப்பு மற்றும் ஆராக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தின் (Nஐழுளு) 3 விருதுகளும், தரம் மற்றும் உற்பத்தித்திறனுக்கான தேசிய மாநாடு (Nஊஞீ) 9 தங்க விருதுகளும் வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளையும் வென்றுள்ளது.

நிகழ்வில இலங்கை அங்கீகார சபையின் தலைவர் பேராசிரியர் அத்துல பெரேரா இலங்கை அங்கீகார சபையின் பணிப்பாளர் நாயகம் சந்திரிக்கா திலக்கரத்ன, இலங்கை தர நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி சித்திகா ஜீ சேனாரத்ன உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விசேட அதிதிகள் பலர் கருத்து தெரிவிக்கையில், விசேடமாக, வைத்தியசாலையொன்றில் இருக்க வேண்டிய சிறப்பம்சங்கள், சிறந்த தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்ததோடு, இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தியமை தொடர்பில் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்த நாட்டிலுள்ள உயர்மட்ட தொழில் அங்கீகார நிறுவனங்களில் உள்ள ஆற்றல் மிக்க பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமையானது சிறந்த சுகாதார சேவையை வழங்கும் ஹேமாஸ் நிறுவனத்தின் நற்பெயருக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.

 

Advertiesment