அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக பணியாற்றிவருபவருமான மிச்செல் ஸ்லெட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியிலுள்ள அவரது வீட்டில் வைத்து பொலிஸாரினால் அவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1993ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுவரை அவுஸ்திரேலிய தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்த இவர், 73 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் உள்நாட்டு வன்முறைச் சம்பவம் ஒன்றுடன் இவருக்கு தொடர்பிருப்பதாகத் தெரிவித்தே மேற்படி கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lanka Newsweek © 2023