ரஸ்யாவினால் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்மதியானது பேரழிவை ஏற்படுத்துகின்ற அணு ஆயுதமாக இருக்கலாம் என்கிற குற்றச்சாட்டை பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து முன்வைத்திருக்கின்றன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ரஸ்யா நிராகரித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி ரஸ்யாவினால் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த செய்மதியானது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலான விடயமாகும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான மார்ஸல் பிலின்ஸி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அமெரிக்காவுக்கும், ரஸ்யாவுக்கும் இடையே எதிர்வரும் வாரத்தில் வியன்னாவில் முக்கிய பேச்சு நடத்தப்படவுள்ளது.
விண்வெளி மற்றும் செய்மதி விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான பேச்சாக இது அமையவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படியான நிலைமையில் ரஸ்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Lanka Newsweek © 2021