Friday 26th of February 2021

English Tamil
Advertiesment


குருநாகல் வேட்பாளர் பட்டியலில் அக்கிலவிராஜ் செய்த அழிவு


2020-07-26 1430

தனது நோக்கத்திற்காக பணக்கார வேட்பாளர்கள் ஊடாக செயலிழப்பு செய்கிறார்


குருநாகல் ஐ.தே.கவின் அத்திவாரம் அசைவு


அரசியலும் இல்லை


ஐ.தே.க பொதுச் செயலாளர் நாடாளுமன்றம் செல்ல 17 வேட்பாளர்களும் களத்தில்


(குருநாகல் விசேட நிருபர்)
 

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவாசம், தனது நாடாளுமன்றக் கனவை நனவாக்கும் நோக்கில் மட்டுமே பொதுத் தேர்தலுக்கான குருநாகல் மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தயார்படுத்தியிருப்பதாக குருநாகல் மாவட்ட அமைப்பாளர் குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்சியின் பொதுச் செயலாளராகிய அக்கிலவிராஜ், அரசியலைப் புரிந்து கொள்ளாத, மக்களை அறியாத, மக்களிடையே வேட்பாளர்களாக இல்லாத ஒரு குழுவைக் களமிறக்குவது மற்றும் மாவட்டத்தின் 14 இடங்களிலும் முன்னுரிமை வாக்குகளை சேகரிக்கப் பயன்படுத்துவது போன்ற மோசடியான அரசியல் நோக்கத்தை கொண்டுள்ளார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பின் உள் வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.


வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அக்கிலவிராஜ் காரியவாசம் உட்பட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் பட்டியலில் உள்ள மற்ற அனைத்து வேட்பாளர்களும் இரண்டு முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் தவிர புதியவர்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த வேட்பாளர்களில் பெரும்பாலோர் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையைச் சேர்ந்தவர்கள் அல்லது இல்லாதவர்கள், சிலர் அரசியல் அரங்கில் கூட நுழையவில்லை. சிலர் வேட்புமனு நாள் வரை இலங்கையில் ஒரு தேர்தலிலும் போட்டியிட்டிருக்கவில்லை.  சில வேட்பாளர்கள் பணக்கார வணிகர்கள்.


கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் குருநாகல் மாவட்டத்தில் இருந்து அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்மாவட்ட மாவட்ட அமைப்பின் பெரும்பான்மை சுட்டிக்காட்டுகிறது. அக்கிலவிராஜ் காரியவாசம் தனது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை வன் மேன் சோ என்ற வகையில்தான் நுட்பமாகத் திட்டமிட்டுள்ளார்.


இப்போது, சில வேட்பாளர்கள் அக்கிலவிராஜின் இந்த அரசியல் சூழ்ச்சியை அடையாளம் கண்டுள்ளனர். இதன் விளைவாக, குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளர் ஒருவர் கட்சியின் வேட்பாளர் பட்டி;யலிலிருந்து விலகியுள்ளார். ஆனால் பல வேட்பாளர்கள் தங்கள் பாதத்தை முன்னோக்கி வைத்த தருணத்தை பின்னால் இழுக்க முடியாமல் உதவியற்ற நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை கைவிட்டுவிட்டு, அவர்கள் அறியாமல் செய்த தவறை சரிசெய்ய ஓகஸ்ட் 05ஆம் திகதிவரை காத்திருக்கிறார்கள்.


இதற்கிடையில், அக்கிலவிராஜ் காரியவாசம் இப்போது உதவியற்ற வேட்பாளர்களால் எதையும் செய்ய முடியாது என்று எதையும் செய்யச் சொல்கிறார். இந்த பொதுத் தேர்தலை எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலின் ஒத்திகையாகப் பார்க்குமாறும் தெரிவித்துவரும் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ், இத்தேர்தலை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வரும் தேர்தலில் வெற்றிபெறுவது சுலமம் என்று கூறி வேட்பாளர்களிடமுள்ள கடைசி பணம்வரை செலவுசெய்வதற்கான ஊக்கப்படுத்தலை வழங்கிவருவதாக குருநாகல் மாவட்ட அமைப்பாளர் குழுவிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertiesment