Sunday 10th of December 2023

English Tamil
Advertiesment


பெண் உடலில் ஆண் ஹார்மோன் சுரந்தால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..?


2019-09-10 7888

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களில் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன்களின் ஒன்றாகும்.

இந்த ஹார்மோன் ஆண்களில் மட்டும் தான் சுரக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது பெண்களுக்கும் சுரக்கின்றது.

ஏனெனில் பெண்களின் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவிலும், ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது.

சில பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரக்கின்றது.

இதனால் அவர்களில் உடம்பில் பல்வேறு மாற்றங்களும் பல உடல் உபாதைகளும் ஏற்படுகின்றது.

அந்தவகையில் இந்த ஹார்மோன்களால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால், அவர்களின் முகம், கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்கள் இது போன்ற உடல் உறுப்புகளில் முடி வளர்ச்சிகள் அதிகமாகும்.

முகத்தில் முகப்பருக்கள் அடிக்கடி ஏற்பட்டால் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் இருந்தால், திடீரென்று உடல் பருமனடைந்து, சர்க்கரை அல்லது உப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கச் செய்யும்.

மாதந்தோறும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், அது அப்பெண்ணிற்கு பி.சி.ஓ.எஸ் என்னும் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிககரித்து இருந்தால் தலைமுடியின் அடர்த்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே அதிக முடி உதிர்வுகள் ஏற்படுத்தும்.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் இருந்தால், அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் புதிய சதை வளர்ச்சியின் மூலம் ஏற்படும் கட்டியினால் பெண்குறியின் அளவு பெரிதாக இருக்கும்.

 

Advertiesment